முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார்.
ஆணைக்குழுவில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி 6 மணி நேரத்திற்கு மேலாக சாட்சியமளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் என தெரியவருகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மீண்டும் நாளை மறுதினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.