இணைய உலாவிகள் சிறிய கோப்பு அளவை உடைய மென்பொருட்கள் ஆகும்.
எனினும் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட பதிப்புக்களை விடவும் தற்போதைய பதிப்புக்கள் பிரதான நினைவகத்தில் (RAM) அதிக இடத்தைப் பிடிக்கின்றன.
இதனால் பிரதான நினைவகத்தின் கொள்ளளவு குறைந்த கணினிகளில் இணைய உலாவிகளின் வேகம் மந்தமாகவே காணப்படும்.
இப் பிரச்சினைக்கு தீர்வாக பிரதான நினைவகத்தின் அளவினை கூட்ட வேண்டும்.
எவ்வாறெனினும் தற்போதுள்ள இணைய உலாவிகள் அதிகளவு இடத்தினை மெமரியில் பிடிப்பதற்கான காரணத்தினை மைக்ரேசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது இப் புதிய பதிப்புக்களில் Multiple Processes தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு நேரத்தில் பல்வேறு முறைவழியாக்கங்களை மேற்கொள்வனாலேயே அதிக மெமரி தேவைப்படுகின்றது.
குறிப்பாக Browser process, Renderer processes, GPU process, Utility processes, Plug-in processes and extension processes, Crashpad handler process ஆகிய முறைவழியாக்கங்களை தற்போதைய இணைய உலாவிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளுகின்றன.