புதுச்சேரியில் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட நாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையமை சேர்ந்தவர் மோகன் (50). இவர், தனது வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகிறார். அதில், இரு நாய்களை சில தினங்களுக்கு முன் மர்ம நபர் கல்லால் தாக்கியதில் கால்களில் முறிவு ஏற்பட்டது.
அதற்கு சிகிச்சை அளித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பொமேரியன் நாய், வீட்டின் அருகே இறந்து கிடந்தது.
அருகில் பிரியாணி பாக்கெட் இருந்தது. அதில், விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்ட மோகன், இதுகுறித்து பொலிசில் புகார் தரப்பட்ட நிலையில் பொலிசார் நாய் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் பிரியாணியில் கலந்திருந்த விஷத்தால் நாய் இறந்தது தெரியவந்தது.
இது குறித்து மோகன் அளித்த புகாரில், பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் பெருமாள் என்பவர் நாய்களை துன்புறுத்தியதாகவும் ஒரு நாயை கொன்றிப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.




















