3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி சீறி பாய்ந்த ரஷிய விண்கலம் 3 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கஜகஸ்தானில் ரஷ்யவால் இயக்கப்படும் பைகோனூர் ஏவுதளத்திலிருந்த இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டு விண்வெளி வீரர்கள் மற்றும் நாசா விண்வெளி வீரருடன் ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்-17 விண்கலம் புதன்கிழமை ஏவப்பட்டது.
எம்.எஸ்-17 விண்கலத்தில் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் மற்றும் நாசாவின் கேத்லீன் ரூபின்ஸ் ஆகியோர் பயணித்தனர்.
ஏவப்பட்ட சிறிது நேரத்தில் விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் சென்றதாக விண்வெளி வீரர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், 3 மணி நேரத்தில் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சேர்த்து ரஷ்ய விண்கலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
விண்கலம் ஏவப்பட்டது முதல் படிபடியாக பிரிந்து சென்ற காணொளி காட்சியை நாசா வெளியிட்டுள்ளது.
#BREAKING Three-person crew blasts off for ISS in Russian capsule: space agencies pic.twitter.com/3Ws0HBCLsu
— AFP news agency (@AFP) October 14, 2020




















