வவுனியாவில் காணப்படும் மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும், பாதையூடாக பயணிக்கும் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த செய்திக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை , மின்சார சபை பொறியியாளர்கள் , உயர் அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதால் மின்சாரத்தை துண்டிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனினும் இவ்வாறு சரிந்து காணப்படும் மின் கம்பத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படவில்லை .தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததும் அகற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கு அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது .
அவ்வாறு அவசர நிலை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மின்சார சபை , வீதி திருத்தப்பணி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.