பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அதிக வேதனையளிக்குமென தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவையென சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
உலகில் பல மில்லியன் பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது வேதனைக்குரிய விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சரியாக அறிந்துகொள்ள தானும் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிய அளவில் அசௌகரியம் ஏற்பட்டாலும் அது பயப்பட வேண்டிய விடயம் ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.