விண்வெளியில் மிதக்கும் ரஷ்ய செயற்கைகோள் ஒன்றின் பாகம் செயலிழந்த சீன ரொக்கெட் ஒன்றின் மீது இன்றையதினம் மோதக்கூடுமென அமெரிக்க ஆய்வகமான லியோ லேப்ஸ் நிறுவனம் கணிக்கப்பிட்டுள்ளது.
பூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் சுமார் 991 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்மோதல் நிகழலாம் என குறித்த ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
விண்ணில் குப்பையாக சுற்றும்,1989இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய செயற்கைகோள் மீது சீனாவால் 2009இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த ஒரு ரொக்கெட்டின் பாகம் இன்று மோதும் என கணிக்கப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான வாய்ப்புகள் 10 சதவீதம் தான் என்றாலும், இந்த மோதல் நிகழ்ந்தால் அது பயங்கரமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.




















