யாழ்ப்பாணம் – அரியாலை,நாவலடி பகுதியில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரியாலை,நாவலடி பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே, வீட்டின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது நாவலடி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















