இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 87.56 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விபரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 73,70,469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64,53,779 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8,04,528 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1,12,161 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 63,371 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70,338 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 895 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 87.56 ஆகவும், இறப்பு சதவீதம் 1.52 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 9,22,54,927 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,28,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



















