தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், அவரது தாயாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்திற்கும், தவுசாயம்மாள், பலத்தின் ஆதாரமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்துள் ளார் என்றும், பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தவுசாயம்மாளின் எளிமை, அன்பு, சுயநலமற்றத்தன்மை, முதல்வரின் குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரது உயிர் பிரிந்தாலும், நினைவால் அவர் என்றும் உங்களுடன் வாழ்வார் எனவும், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



















