பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு பொலிசார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர், சார்ஜன் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கம்பஹாவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தலைமையில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டது.
கைதான 21 வயது இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். இந்த விவகாரத்தில் இளைஞனை தாக்கிய குற்றச்சாட்டில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















