நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் விவகாரத்தில், அவர் இந்நேரம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவரைக் கைது செய்யப்போவதாக முன்கூட்டியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ரிஷாட் பதியூதீன் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் நாம் சிறப்பாகச் செயற்பட்டு அவரை விரைவில் கைது செய்வோம் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















