கம்பஹா பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹாவின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















