பஞ்சாபில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் ஃபரிட்கோட் மாவட்டத்தில் ஃபரிட்கோட்டின் காலர் கிராமத்தில் தலைவர் தரம்பால் வெளியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாகஅவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.
இதனால் தரம்பால் குடும்பம் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் ஒரு எல்பிஜி சிலிண்டரைக் கொண்டு வந்திருந்தார். அவர் அறையை உள்ளேயே பூட்டி, 10 லிற்றர் மண்ணெண்ணெய் தன் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊற்விட்டு சிலிண்டரின் ரெகுலேட்டரை அகற்றி தீ பிடிக்க வைத்துள்ளார்.
இதில் அந்த அறை வெடித்து சிதறியதில் 4 பேரும் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதனிடையே தரம்பால் தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார்.
இதில் ரூ .8 லட்சம் கடன் வாங்கியதால், கடன் அடைக்கமுடியாததால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கடிதத்தைக் கைப்பற்றிய பொலிசார் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.