20ஆவது திருத்தச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கத்தினை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டது எனவும் இந்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் சட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சில சரத்துக்கள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதன் மூலமே நிறைவேற்றப்பட வேண்டியிருந்த போதிலும் அவை குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது.