கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள மேலும் 60 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 35 பேர் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பணியாளர்கள் என்பதோடு, ஏனைய 25 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.