இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும்.
தொடர்ச்சியாக இருமல் வந்தால், உங்கள் நெஞ்சில் வலி ஏற்பட்டு உடலும் சோர்வடைந்து விடும்.
இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகையையும் கூட காரணமாக சொல்லலாம்.
இதுபோன்ற, பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும். அந்தவகையில் இருமலை விரட்டும் ஒரு சூப்பரான பானம் ஒன்றினை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- எழுமிச்சைப் பழச்சாறு – இரண்டு டீஸ்பூன்
- ஒயிட் வினிகர்- ஒரு டீஸ்பூன்
- தேன் – ஒரு டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு டீஸ்பூன்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- இலவங்க பட்டை – சிறிய அளவு
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் மேல் குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் அதில் குறிப்பிட்ட அளவில் சேர்த்து கலக்க வேண்டும்.
அதன் பிறகு, தேவையான சூட்டினை நீங்கள் உணர்ந்ததும் கொதிப்பதை நிறுத்தி விட்டு அதனை தேவைக்கு தகுந்தது போல பருகலாம்.
குளிர்காலத்தில் காலை உணவுக்கு பிறகும் மற்றும் இரவு உணவுக்கு பிறகும் இந்த உற்சாக பானத்தினை அருந்தலாம்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் இருமல் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்.
மேலும், இருமல் முடிந்த பிறகும் இதனை தொடரலாம். ஏனெனில், இது அனைத்து நாட்களும் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு மேலும் நல்ல முன்னேற்றத்தினை குளிர்க்காலத்தில் கொடுக்கும்.