கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மக்கள் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக கிரிக்கட் போட்டிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தனது நாட்டு கிரிக்கட் வீரர்கள் பயிற்சி மற்றும் சோதனைகளில் ஈடுபடுவதற்கு வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
இதற்காக 3 உத்தியோகபூர்வ வாட்ஸ் ஆப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்று 14 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கானது, இரண்டாவது 16 வயதிற்குட்பட்டவர்களுக்கானது மற்றையது 18 வயதிற்குட்பட்டவர்களுக்கானதாகும்.
இதன் மூலம் பயிற்சியாளர்கள் வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.