இலங்கையில் தற்சமயம் நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொது முடக்கம் ஒன்று வரக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது கொத்தணியாக விஸ்வரூபமெடுத்துள்ளது.
முக்கியமாக கம்பஹா கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் புதுப்புது இடங்களில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவது சுகாதாரத்துறைய திணறவைத்துள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா இன்னும் சமூகத்தொற்றாக மாறவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.