இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 வது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது
1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய சாலை பணியாளர்கள் 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 33 வது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனாா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள் வைத்தியசாலையின் கணக்காளர்,இந்தியர்கள்,வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது
தற்போது கொரோணா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வர்களுடன் சுகாதார முறைப்படி நடத்தப்பட்டது