இந்தியக் கடவுளான துர்கா தேவியின் புகைப்படத்தை அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸூடன் சித்தரித்து வெளியிடப்பட்ட புகைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிம் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சியான ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இதில் ஜனநாயக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்தியா மற்றும் ஜமைக்கா நாட்டு வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நவராத்திரியை முன்னிட்டு தீமைக்கு எதிராக போராடி வெற்றி பெறவேண்டும் என்ற வாசகத்தின் அடிப்படையில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் சிலர் இந்தியக்கடவுள் துர்கா தேவியுடன் கமலா ஹாரிஸை சித்தரித்து புகைப்படம் வெளியிட்டிருந்தனர். அதில் கமலா ஹாரிஸ் துர்க்கா தேவியாகவும் ஜோ பைடன் தேவி அமர்ந்திருக்கும் சிங்கமாகவும் தேவியால் கொல்லப்படும் அரக்கண் ட்ரம்ப் ஆகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இணையத்தில் வைரலான இந்த புகைப்படம் இந்திய வம்சாவளியினரிடையே கடும் எதிர்ப்பை பெற்றது.
இதனை அடுத்து வெளியிடப்பட்ட புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டது. இருப்பினும் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் கமலா ஹாரிஸை விமர்சித்து வருகின்றனர். துர்க்கா தேவியை மிகைப்படுத்தி கேலி செய்ததன் மூலம் உலக அளவில் உள்ள பல இந்துக்களை ஆழ்ந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர் என இந்து அமெரிக்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும் இந்துக்களில் வாக்குகளை கவர அரசியல் ஆதயாத்துக்காக வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கமலா ஹாரிஸுக்கு தேடித்தரும் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
So much for liberal freedom of expression. @MeenaHarris
The great sister of @KamalaHarris uploads an offensive image showing Hindu Goddess Durga as her sister and when we take action he deletes and blocks me. Not unexpected of such odd day Indian & Even Day Black for vote bank. pic.twitter.com/yIQiSLc4vy
— arun pudur (@arunpudur) October 18, 2020