நண்பரின் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த நபரை கணவர் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் கண்ணகி நகர், 14வது பிளாக்கில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் கார்த்திக்(20). அந்த நேரத்தில் அங்கு வந்த ரகு(29) தீனா(19), நித்தீஷ் ஆகியோர் கார்த்திக்கை தலையில் சரமாறியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர், வெட்டு வாங்கிய பிறகு அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அருகில் உள்ளவர்களும் போலீசாரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் நடத்தி விசாரணையில் ரகு என்பவரின் மனைவி வினிதா என்பவருக்கும் ரகுவின் நண்பரான கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களாக முறையற்ற உறவு இருந்ததாகவும்.
கடந்த ஆண்டு வினிதாவை கார்த்திக் அழைத்து சென்று ஒரு வார காலம் வைத்திருந்தாலும் ஆத்திரத்தில் இருந்த ரகு நேற்றிரவு திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார் என தெரியவந்துள்ளது.
மேலும், ராகுவின் நண்பரான தீனா (எ) கருப்பு தீனா என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















