அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஸ்ரீலங்கா வருகை தரவுள்ள நிலையிலேயே இவர்கள் முன்கூட்டியே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.