எல்போட தோட்ட தேயிலை தொழிற்சாலை மூடப்பட்ட விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத்தருவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எல்பொட தோட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலையை மீள திறக்குமாறு தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ் விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து குறித்த தோட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், தோட்ட தலைவர், தலைவிகள் இன்றைய தினம் அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது இன்னும் ஒரு வாரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி மாரிமுத்து மற்றும் இ.தொ.காவின் மாநில காரியாலயத்தின் உத்தியோஸ்தர்கள் குறித்த தோட்ட தலைவர், தலைவிகள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.