ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்டது என்ற நம்பவே முடியாத நிகழ்வு கிரிக்கெட்டில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் உலகில் பல அசாதரண சாதனைகள் குறித்து கேள்விபட்டிருப்போம்.
1800-ல் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் ஒரே பந்தில் 286 ரன்களை ஒடியே எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் மேற்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் நடைபெற்றுள்ளது. 1894-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி விக்டோரியா ஸ்காரட்ச் XI உள்ளூர் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா அணி தான் எதிர்கொண்ட முதல்பந்தை தூக்கி அடித்துள்ளது. அந்த பந்து மைதானத்திலிருந்த மரத்தின் கிளைகளில் வசமாக சிக்கி கொண்டது.
பந்து மரத்தில் சிக்கியதை தொடர்ந்து தொடக்க வீரர்கள் ரன் ஓடி கொண்டு இருந்துள்ளனர். பந்தை இழந்து விட்டதாக அறிவிக்குமாறு பந்துவீச்சாளர் நடுவரிடம் வலியுறுத்தி உள்ளார். பந்து அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததால் நடுவர்கள் மறுத்து விட்டனர்.
மரத்தில் சிக்கிய பந்தை பல வழிகளில் எடுக்க முயற்சித்துள்ளனர். கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது, துப்பாக்கியால் குறிவைத்து சுடுவது போன்ற முயற்சிகள் என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தொடக்க வீரர்கள் ரன் எடுத்து கொண்டே எடுத்துள்ளனர்.
ஒரு வழியாக பந்து மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை யாரும் கேட்ச் செய்யவில்லை. ஆனால் அதற்குள் தொடக்க வீரர்கள் 286 ரன்களை ஓடியே எடுத்துள்ளனர்.
இறுதியாக விக்டோரியா அணி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது தான் உச்சக்கட்ட சுவாரஸ்யமாக அமைந்தது, ஒரு பந்தில் 286 ரன்கள் ஓடியே எடுத்து ஒரு பந்திலேயே போட்டியும் முடிந்தது குறிப்பிடத்தக்கது.