நாட்டில் கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக மற்றுமொரு பொலிஸ் நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இதன்படி காலி மாவட்டம் கொஸ்கொட பொலிஸ் நிலையம் நேற்று இரவுமுதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அண்மையில் அஹூங்கல்ல பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மருந்தகமொன்றுக்கு மருத்துவரை சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.
குறித்த மருத்துவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.