விசேட அதிரடிப்படையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மூன்று முகாம்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை கோவிட்-19 வைரஸ் தடுப்பு படையணி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த 11 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் களுபோவில, ராஜகிரிய மற்றும் களனி முகாம்கள் முடக்கப்பட்டுள்ளன.