ஊரடங்கு சட்டம் அமுலிருக்கும் காவல்துறை அதிகார பகுதிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பகுதிகளில் எந்த சந்தர்ப்பத்திலும் வாகனங்களை நிறுத்த முடியாது.
அதனையும்மீறி வாகனங்களை நிறுத்துவதும் வாகனங்களில் இருந்து பொருட்களை பரிமாறிக் கொள்வதும் இடம்பெறுமாயின் அந்த வாகனங்கள் காவல்துறையினால் கையகப்படுத்தப்படும்.
ஏதாவது அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனமாயின் அதற்கான அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டும்.
இதனைத் தவிர்த்து பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை.
அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறயவர்களாக கருதிஇ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.