உலகம் முழுவதையுமே சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் முன்னாள் உளவுத்துறைத்தலைவர் எச்சரிக்கும் நிலையில், மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை அது பார்ப்பதாக கருத்து எழுந்துள்ளது.
ஜேர்மன் உளவுத்துறையின் முன்னாள் தலைவராக இருந்த Gerhard Schindler, சீனாவை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதை கட்டுப்படுத்துமாறு ஜேர்மனியை வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளை மீறும் சீனாவின் தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனமான Huaweiயின் 5G நெட்வொர்க்கை தடை செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா புத்திசாலித்தனமாக, அமைதியாக, ஆனால் தொடர்ச்சியாக காய் நகர்த்தி வருவதாகவும், ஆனால், ஐரோப்பா அதை கவனித்ததுபோலவே தெரியவில்லை என்றும் Schindler கூறுகிறார்.
ஏற்கனவே உலகத்தை சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுவருவது குறித்து உலக நிபுணர்கள் அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ள நிலையில் Schindlerஇன் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான Emily de la Bruyere கூறும்போது, மூன்றாம் உலகப்போர் ஏற்படும்பட்சத்தில், ஐரோப்பாவைத்தான் அது போர் நடைபெறும் போர்க்களமாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா ஜேர்மனியை அந்த போரின் அச்சாணியாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவால் ஜேர்மனியை வெல்லமுடியுமானால், அதனால் ஐரோப்பாவையும் வெல்ல முடியும், ஏன், உலகத்தையே வெல்லமுடியும் என எச்சரிக்கிறார் Emily.