யாழ் வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் ஜே.380 கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் மந்திகை வைத்தியசாலையில் சுகாதாரத் தொழிலாளியாக உள்ள கருணாகரன் என்பவனும் ஆசிரியையான அவனது மனைவியும் நள்ளிரவு நேரங்களில் தமது வீட்டுக்கு அருகில் வெடி கொழுத்தி சந்தோசப்படுவதாக அயலவர்கள் கடும் விசனம தெரிவித்துள்ளனர். என்ன காரணத்துக்காக இவர்கள் இவ்வாறு வெடிகொழுத்துகின்றார்கள் என தெரியாது அயலவர்கள் கருணாகரனிடம் கேட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு நள்ளிரவில் வெடி கொழுத்துவதால் சிறுவர்கள், ஏ.எல் படிக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என அயலவர்கள் கூறிய போது கருனாகரனும் அவனது ஆசிரியையான அவனது மனைவியும் அயலவர்களை கடுமையாக தகாதவார்த்தைகளால் ஏசி வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கிராமசேவகரிம் முறையிட்ட போதும் பலனில்லாது போய்விட்டது. ”ஆமி செல் அடிக்கும் போது கேட்டுக் கொண்டு இருந்தீர்கள்தானே… இப்போது இந்த சிறிய வெடியை உங்களால் கேட்க முடியாதோ?? எனது வீட்டில் வெடி கொழுத்துவதை தடுப்பதற்கு நீங்கள் யார்”? என அயலவர்களை கண்டபடி ஏசி ரவுடித்தனம் பண்ணுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.