கொழும்பிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த யுவதியொருவரும், அவருடன் தொடர்பை பேணிய மூன்று இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இளவாளை பகுதியில் உள்ள வீடொன்றில் அவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலிற்கமைய அந்த வீட்டிற்கு சென்று அவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
யுவதி நகரில் தங்குமிடமொன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது.