பிரித்தானியா மகாராணி, எலிசபத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
ராணி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
கு தலா 3 மாதங்கள் ஒவ்வொரு அரண்மனையிலும் பணியாற்றும் வகையில் அவர்களது பணிக்காலம் அமையும்.
இது ஒரு நிரந்தர பணி வாய்ப்பாகும். ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு வேளை, இந்தக் கல்வித் தகுதி இல்லாமல், நேர்முகத் தேர்வின் போது நன்கு பணியாற்றக் கூடியவராக அறியப்பட்டால், அவர்களுக்கு 13 கால பயிற்சியின் போது கல்விப் பயிற்சி அளித்து தெரிவு செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த பணியில் சேர்ந்தவர்கள் அரண்மனையில் வசிப்பதோடு, ஆண்டுக்கு 33 நாள்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்துப்படி அனைத்தையும் பெறலாம். ஊழியர்களுக்கு என்று தனியாக உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானமும் உள்ளது.
வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே பணி நாள். இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் 18.5 லட்சம் ரூபாய். இது வெறும் தொடக்க ஊதியம்தான் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 தான் கடைசி நாள். நேர்முகத் தேர்வு நவம்பர் 2-ஆம் திகதி தொடங்குகிறது.