பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும்,கொரோனா மரணங்கள்!
கொரோனா வைரஸ் காரணமாக நேற்றைய தினம் பதிவான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 52,000 பேருக்கும் மேல் தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை 26,771 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதமும் 17% இல் இருந்து 17.8% வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று ஒரே நாளில் 258 பேர் சாவடைந்துள்ளனர். உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பதிவாகும் அதிகூடிய தொற்று இதுவாகும். நேற்றோடு சாவு எண்ணிக்கை 35,018 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. தற்போது 2,761 பேர் பிரான்சில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
சாதாரண சிகிச்சைப்பிரிவில் 17,761 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.