பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் திருப்பலி நடக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்த ஒருவர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டபடியே அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஆக, மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
பிரெஞ்சு நகரமான Niceஇலுள்ள Notre Dame basilica என்ற தேவாலயத்தில் திருப்பலி தொடங்கிய 9 மணிக்கே இந்த தாக்குதலும் தொடங்கியுள்ளது.
உடனடியாக தேவாலயத்துக்குள் நுழைந்த பொலிசார், தாக்குதல் நடத்தியவரை சுட்டுப் பிடித்துள்ளார்கள்.
நகர மேயரான Christian Estrosi கூறும்போது, தாக்குதல்தாரிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பின்னரும், அவர் அல்லாஹூ அக்பர் என்று கத்துவதை நிறுத்தவில்லை என்றார்.
ஆகவே, இது தீவிரவாத தாக்குதல் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர். பிரான்சில் தீவிரவாதி ஒருவனால் ஆசிரியரான Samuel Paty என்பவர் தலை வெட்டபட்டு கொல்லப்பட்டு 13 நாட்களே ஆகியுள்ள நிலையில், இஸ்லாமிய பாசிசத்தை அழிக்கும் அளவுக்கு நம் நாட்டின் சமாதான சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்றார் அவர்.