அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா, மத சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த பாம்பியோ தற்போது இந்த கருத்தினை தெரிவித்து உள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போர் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும், மத சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிராகவும் உள்ளது என்றும், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஃபாலுன் காங் பயிற்சியாளர்களிடம் சீனா ஒரே மாதிரியாக நடந்துகொண்டுள்ளது என்றும் பாம்பியோ இன்று முஸ்லீம் அமைப்பான நஹ்தலத்துல் உலமாவுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
மேலும், “நாத்திக சீன கம்யூனிஸ்ட் கட்சி, சிஞ்சியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களை மிருகத்தனமாக நடத்துவது பயங்கரவாத எதிர்ப்பு அல்லது வறுமை ஒழிப்பு என உலகத்தை நம்ப வைக்க முயன்றது,” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “பெய்ஜிங் சமூகத்தை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்து அதன் இஸ்லாமிய பாரம்பரியத்தை வேரறுக்க முயற்சிப்பதால் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.” என்றும்
“ரமாலான் காலத்தில் பன்றி இறைச்சியையும், உய்குர் இனக்குழுவின் முக்கிய நபரின் கல்லறையை அழித்தும் சீனா அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், மறுபுறம் தீவிரவாதத்தினை வேரறுக்க முயல்வதாக வெளியில் சொல்லி வருகின்றது.” என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸில் இளைஞர் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்றுள்ள மற்றொரு தாக்குதலும் என மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி, அமெரிக்கா, ஐரோப்பா வரை நீண்டு கொழுத்துள்ள வன்முறை கலாச்சாரங்களை காணாமல், தங்கள் நாடுக்கு இணையாக வளர்ந்து வரும் சீனா மீது அமெரிக்க தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் பாம்பியோவின் தற்போதைய பேச்சும்.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் காவல்துறையின் துப்பாக்கிச்சூடு காரணமாக கறுப்பின இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.