வடமேற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கடந்த இரு தினங்களாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சல்பையாறு கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை கிழக்கு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன்போது வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியல் ஈடுப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குச்சுவேலி பகுதியைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மீன்பிடி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை , கல்லாறு கடற்பகுதியில் நேற்று முன்தினம் வடமேற்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மாக கடல் நத்தைகளை பிடித்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 20-57 வயதுக்கு இடைப்பட்ட ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மீன்பிடி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் 300 கடல் நத்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சுவேலி பொலிஸார் மற்றும் மன்னார் கடற் தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.