யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 24ம் திகதிவரை சமூக மட்டத்தில் நடமாடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந் நிலையில், அவர் பொது போக்குவரத்தில் பயணித்த வழித்தடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, பருத்தித்துறை – மயிலிட்டி – கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்திற்கு, குறித்த தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்
21/10/2020- பருத்தித்துறை – ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி
22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்
23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்
1- 22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு பொலிகண்டியில் இருந்து – பலாலிக்கு
2- 24/10/2020-கீரிமலை – பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு
பகல் – 6.30 க்குகுறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக தங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.