மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது ரயில் சேவைகள் இடம்பெறும் கால அட்டவணையை ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் வெளியிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் இரண்டாம் திகதி காலை 5 மணி வரை அமுலில் உள்ள இந்த ஊரடங்கு காலப்பகுதியில் ரயில் சேவைகள் பின்வருமாறு இடம்பெறும்…
2020.10.30 – 2020.11.01
குறித்த இரண்டு நாட்களில் ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பெலியத்த, காலி, அளுத்கம, களுத்துறை முதல் மருதானை அவிசாவளை ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகள் இடம்பெறாது.
அத்துடன் அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை எந்த ரயில்களும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.