இந்தோனேஷியாவில் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலனை கண்டுபிடித்து பெண்ணின் குடும்பத்தினர், அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவத்தைக் கண்டு தாய் கதறி அழுதுள்ளார்.
23 வயது மதிக்கத்தக்க Mario Natriti என்பவர் Desiana என்ற 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு, பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து Desiana வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின் இந்த ஜோடி, கடந்த 20-ஆம் திகதி இந்தோனேஷியாவின்கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ளனர்.
இது குறித்த தகவல் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர, இது அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், Desiana-வை வீட்டுக்கு வரும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில், பெண்ணின் குடும்பத்தினர், Mario Natriti-வை பிடித்து, அங்கிருக்கும் வேலிக்கு அருகே தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர்.
சுமார் அரைமணி நேரம் இப்படி தொங்கவிட்டுள்ளனர். அதன் பின் அவர் மீட்கப்பட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தலைகீழாக தொங்கவிடப்பட்டதன் காரணமாக கடுமையான தலைவலியை Mario Natriti அனுபவித்துள்ளார்.
இது குறித்து Mario Natriti-வின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தனது மகனுக்கு எதிரான மனிதாபிமானமற்ற துஷ்பிரயோகம் என்று தாய் துஜு ஜூலி யூலி கூறியுள்ளார்.
என் மகன் அப்படி ஒரு மிருகத்தைப் போல நடத்தப்படுவதைக் கண்டு நான் அழுதேன். அவர் தலைகீழாக தொங்கியது மட்டுமல்லாமல், பல முறை அடிக்கப்பட்டார்.
எனது குழந்தையின் உரிமைகளுக்காக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர் ஒரு மிருகத்தைப் போலவே நடத்தப்பட்டார். என் குழந்தை ஒரு குற்றவாளி அல்ல, என்று கூறி, இந்த சம்பவம் குறித்த வீடியோவின் நகலை ஆதாரமாக வழங்கியுள்ளார்.
பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சாட்சியத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.