பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நிறைய நோய்களைத் தீர்க்கும் அற்புத மருந்தாக நம்முடைய முன்னோர்கள் பூண்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அத்தகைய பூண்டின் மருத்துவ குணங்கள் மற்றும் எடையைக் குறைக்க எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எடை இழப்பிற்கு பூண்டு எப்படி உதவுகிறது?
- பூண்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நம் அனைவர்க்கும் ஏற்கனவே தெரியும்.
- இதில் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ட்டிவ் காம்பௌண்ட்ஸ் நிரம்பியுள்ளது.
- இது பல வகையான சுகாதார நிலைமைகளிலிருந்து நிவாரணம் வழங்க உதவுகிறது.
- நீங்கள் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு பூண்டு தான் ஒரு சிறந்த வீட்டு மருந்தாக அமைகிறது. ஆச்சரியப்படும் விதமாக, சில குறிப்பிட்ட வழிகளில் பூண்டை சாப்பிடுவது, தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
பூண்டை தனியே சாப்பிடுவதைக் காட்டிலும் வேறு சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது, பயன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
மிளகுடன் சேர்த்து
கருப்பு மிளகுடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று பூண்டு துண்டுகளை போட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை, பூண்டு துண்டுகளை நீக்கி அதில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, இந்த கலவையை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
தேனுடன் சேர்த்து
தேனுடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று பூண்டு துண்டுகளின் தோலை நீக்கி அதனை நசுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு இதை, சிறிது தேனில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பதினைந்தில் இருந்து இருபது நிமிடம் வரை அப்படியே வைக்கவும். இருபது நிமிடம் கழித்து இந்த கலவையை நீங்கள் உட்கொள்ளலாம். இதை தினமும் ஒரு முறை செய்யுங்கள்.
எலுமிச்சை சாறுடன்
எலுமிச்சை சாறுடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்லது மூன்று உரிக்கப்பட்ட பூண்டு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்பு, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பூண்டு நம் உடலுக்கு நன்மையை அளிக்க கூடியது தான்; இருப்பினும், ஒரு நாளில் அதிக அளவு பூண்டு உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், அளவுக்கு அதிகமாக பூண்டு உட்கொள்வது துர்நாற்றம், வாய் அல்லது வயிற்றில் எரியும் உணர்வு, நெஞ்செரிச்சல், வாயு, குமட்டல், வாந்தி, உடல் வாசனை, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு துண்டுகள் உட்கொண்டால் போதும்.