13 வயது சிறுமி ஒருத்தியைக் கடத்திச் சென்று கட்டாயத்திருமணம் செய்த நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். இந்த சம்பவம் நடந்துள்ளது பாகிஸ்தானில்.
கராச்சியில் Arzoo Raja (13) என்ற கிறிஸ்தவ சிறுமியை 44 வயது இஸ்லாமியர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமோ கடத்தியவருக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளது.
காரணம், அந்த நபர் அந்த பெண்ணுக்கு 18 வயது ஆவதாக போலியாக ஒரு பிறப்புச் சான்றிதழை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, அவள் விரும்பித்தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறிவிட்டார்.
நீதிமன்றத்தில் தன் பெற்றோரைக் கண்ட Arzoo, தன் தாயிடம் ஓடி வர முயன்றதாகவும், ஆனால், அவளைக் கடத்திய நபர் அவளை விடாமல் கட்டாயப்படுத்தி பிடித்துவைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை எதிர்த்து கராச்சியிலும் லாஹூரிலும் பல பேரணிகள் நடைபெற்றன. ஆனாலும், நீதிமன்றம் அந்த திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது.
இதற்கிடையில், Arzooவின் பெற்றோர் தங்கள் வேலைகளை இழந்துவிட்டதாகவும், கடத்தியவரால் மிரட்டப்பட்டதாகவும் தொண்டுநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தானில் சுமார் 21 சதவிகிதம் பெண்கள் இதேபோல் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுவதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.