!
அயர்லாந்தில் இந்தியர்களான இளம்பெண் ஒருவரும் அவரது பிள்ளைகளும் இறந்துகிடந்த நிலையில், தற்போதைக்கு மரணத்திற்கான காரணம் விவரிக்க இயலாதது என பொலிசாரால் வர்ணிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் Ballinteer என்ற இடத்திலுள்ள வீட்டில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய குடும்பத்தினரை வெளியே பார்க்கமுடியாததால் அக்கம்பக்கத்தவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் வந்து பார்க்கும்போது வீட்டிலுள்ள தண்ணீர்க்குழாய்கள் திறந்துவிடப்பட்டிருந்ததால், தண்ணீர் பெருகி கதவு வழியாக வெளியே வந்துகொண்டிருந்திருக்கிறது.
வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் சீமா பானு (37) என்ற பெண் கழுத்தை சுற்றி கயிறு ஒன்று இறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
பக்கத்திலுள்ள அறைக்குள் நுழைந்தபோது, அங்கு சீமாவின் மகள் அஸ்ஃபிரா ரிஸா (11) மற்றும் மகன் ஃபைஸான் சையத் (6) ஆகியோரும் இறந்துகிடந்துள்ளார்கள். இந்த காட்சி பொலிசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
பொலிசார் வீட்டுக்கு சென்றபோது அங்கு சீமாவின் கணவர் சமீர் சையத் (36) வீட்டில் இல்லை.
சீமாவும் பிள்ளைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இது தற்கொலையா, கொலையா என எந்த முடிவுக்கும் வர இயலாததால், சீமா மற்றும் பிள்ளைகளின் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
அத்துடன் தற்போதைக்கு பொலிசார் இந்த மரணங்களை விவரிக்க இயலாதது என்று மட்டுமே வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.