கடந்த வருட பிற்பகுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்து பின்னர் இவ் வருட மார்ச் மாதத்திலிருந்து உலகை உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் தாக்கம் குறைந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் புதிய வகை மாஸ்க் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் பயன்பாட்டில் உள்ள மாஸ்க் வகைகள் கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளை வடிகட்டும் ஆற்றல் கொண்டனவாக இருந்தன.
ஆனால் இப் புதிய மாஸ்க் ஆனது வெப்பநிலையை பிறப்பித்து கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளின் செயற்பாடுகளையும் முடக்கவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த மாஸ்க்கின் மாதிரி வடிவமைக்கப்பட்டு வருவதுடன், விரைவில் அசல் மாஸ்க் தாயரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.