வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாகக் காணப்படுகின்றது.
ஆகவே வீடுகளில் இவ்வாறானர்கள் இருப்பின் அவர்களுடன் நெருங்கிப்பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
என்று அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து வெளியிட்டிருக்கும் காணொளியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் முன்னரை விடவும் மிகவேகமாகப் பரவிவருகின்றது.
கொரோனா வைரஸின் கட்டமைப்பு மற்றும் அதன் தன்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே இதற்குக் காரணம் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றாரகள்.
இதன் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதும் அதனைப் பொதுமக்கள் சரிவரப் பின்பற்ற வேண்டியதும் அவசியமாகின்றது.
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாகக் காணப்படுகின்றது.
ஆகவே வீடுகளில் இவ்வாறானர்கள் இருப்பின் அவர்களுடன் நெருங்கிப்பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று கொழும்பில் தொழில்புரிபவர்கள் பொலிஸ் ஊரடங்கின் போது தமது சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்களாயின், அவர்களிடமிருந்து அவர்களின் வீடுகளிலுள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே அனைவரும் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே தொடர்ந்தும் இருக்கவேண்டும்.
அத்தோடு உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுவதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை சுகாதாரப்பிரிவினருக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார்.