பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு பலியான பெண் ஒருவர், அவனை எதிர்த்துப் போராடியதாகவும், இரத்தம் சொட்டும் நிலையிலும் வெளியே சென்று மற்றவர்களை எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சிலுள்ள நைஸ் நகரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீவிரவாதி ஒருவன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் ஒரு ஆணும் இரு பெண்களும் பலியாகினர். உயிரிழந்த பெண்களில் ஒருவரான Simone Barreto Silva (44) குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Simone காலையில் வேலைக்கு செல்லும்போது, வழியில் இருந்த தேவாலயத்துக்குள் பிரார்த்தனை செய்வதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த Brahim Aouissaou என்னும் துனிசியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்கியுள்ளான். அப்போது தாக்கப்பட்டவர்களில் Simoneம் ஒருவர்.
Simoneஐ அந்த தீவிரவாதி தாக்கியபோது, அவர் திருப்பித் தாக்கியதாகவும், அவனுடன் போராடிய Simone, காயமடைந்து இரத்தம் சொட்டும் நிலையிலும், தேவாலயத்தை விட்டு வெளியே சென்று, தேவாலயத்திற்குள் ஒருவர் தாக்குவதல் நடத்துவதாக கூறி, பொலிசார்வரும்வரை மற்றவர்களை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால், மேலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் கூறுகிறார் Simoneஇன் சகோதரியான Solange Barreto.
அத்துடன், பாதிரியாரான Anderson Argolo என்பவரும், Simone ஒரு போராளி, அவர் ஒரு போர் வீரனைப்போல போராடி உயிரிழந்துள்ளார் என்றார்.
இதே கருத்தை தேவாலயத்திற்கெதிரே அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றின் உரிமையாளரான Brahim Jelloule என்பவரும் தெரிவித்துள்ளார்.’ அவர் இரத்தம் சொட்டச் சொட்ட சாலையைக் கடந் தார், பேசிக்கொண்டே இருந்தார், தேவாலயத்திற்குள் ஒருவர் தாக்குதல் நடத்துகிறார் என்றார்’ என்கிறார் Jelloule.
இவ்வளவு நடந்த பின்னும், மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணின் மனம், உயிர் போகும் நிலையில் தன் பிள்ளைகளை தேடியிருக்கிறது… Simoneஇன் கடைசி வார்த்தைகள், என் பிள்ளைகளிடம், நான் அவர்களை நேசிக்கிறேன் என்று கூறுங்கள் என்பதுதான்!