பாகிஸ்தானில் 44 வயது நபர் ஒருவர் 18 வயது பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணிற்கு 18 வயது இல்லை, அவர் விருப்பம் இல்லாமலே திருமணம் நடந்துள்ளது என்ற பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் தன்னுடைய வீட்டில் கடந்த 13-ஆம் திகதி Arzoo Raja என்ற பெண் காணமல் போனார்.
அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து, அவர் 44 வயதான நபர் ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக கூறி, திருமண சான்றிதழுடன் வந்துள்ளார்.
இந்த திருமணம் தொடர்பாக கராச்சி மற்று லாகூரில் எதிர்ப்பு நிலவியது. ஆனால் குறித்த பெண் நீதிமன்றத்தில் தன்னுடைய விருப்பதின் பேரில் இந்த திருமணம் நடந்ததாக கூறியதால், பாகிஸ்தான் நீதிமன்றம் இந்த திருமணத்தை உறுதி செய்தது.
இந்நிலையில், தற்போது நீதிமன்ற விசாரணையின் போது, அந்த பெண் தன்னுடைய தாயிடம் ஓட முயன்றதாகவும், அப்போது அருகில் இருந்த அவருடைய கணவன் பிடித்து மிரட்டி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பெண்ணின் தந்தை, கராச்சியின் ரயில்வே காலனியில் நாங்கள் வசித்து வருகிறோம். என் மகள் கடத்தப்பட்டாளே தவிர, இது நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முயன்ற போது, அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன விஷயம், அதற்கான சான்றிதழ அவர் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ சிறுமியான Arzoo Raja கட்டாய இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமண சான்றிதழில் அவருக்கு 18 வயதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவருடைய பிறப்புச் சான்றிதழ தங்களிடம் உள்ளது, அவளுக்கு 13 வயது தான், மகள் காணாமல் போனதிலிருந்து அர்சூவின் பெற்றோர் வேலை இழந்துவிட்டதாகவும், கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.
கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற பிரச்சாரக் குழுவின் புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தானில் சுமார் 21 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணமானவர்கள்.
பாரம்பரியவாத பழக்கவழக்கங்கள் போன்றவை காரணமாக சில குடும்பங்கள் பருவ வயதை அடைந்தவுடன் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.