ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் போல்டாகியதால், கடும் கோபத்தில் பேட்டை வீசி எறிந்த வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் ஜெயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
கடைசி ஓவர் வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்ல் 99 ஓட்டஙள் எடுத்த நிலையில், ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
இதனால் சற்று கோபமடைந்த கெய்ல் பேட்டை வீசி எறிந்துவிட்டு, அதன் பின் ஆர்ச்சரின் கையை தட்டி சமாதானத்தோடு சென்றார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.