ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் இதில் அடக்கம்.
இதேவேளை பொரளை பொலிஸ் நிலையத்தின் 6 உத்தியோகத்தர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினர்.
நல்லாட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு கோட்டபாய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொரோனா வைரஸ் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கெஹலிய, விடுதலைப் புலிகளை அழித்த எங்களுக்கு கொரோனா எல்லாம் பெரிய விடயம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில் ஊடக அமைச்சராக செயற்படும் கெஹலியவின் அமைச்சுக்குள்ளேயே கொரோனா பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.