அசிடிட்டி பிரச்சினையை நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒவ்வொரு நாள் பிரச்சினையாகும். இந்த அசிடிட்டி பிரச்சினை இரவு நேரங்களில் அதிகமாக வருவதால் சிலரால் நிம்மதியாக தூங்க முடியாது.
இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
லும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே.
அதிலிருந்து விடுபட அடிக்கடி மருந்து மாத்திரைகளை எடுக்காமல் எளிய வீட்டு வைத்திய முறைகளை நீங்கள் பின்பற்றலாம். தற்போது அந்த இயற்கை வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- அசிடிட்டி பிரச்சினையை போக்க பழுத்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடுங்கள். இது உங்க செரிமானத்திற்கு உதவுவதோடு அசிடிட்டி பிரச்சினையையும் போக்கி விடும்.
- உங்களுக்கு அசிடிட்டி பிரச்சினை ஏற்படும் போது 5-6 துளிசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது உங்க வயிற்றில் ஏற்படும் அசெளகரியத்தை போக்க உதவும்.
- குளிர்ந்த பாலில் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடியுங்கள். அதனுடன் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்வது உங்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும்.
- நட்சத்திர சோம்புவை எடுத்து வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். அசிடிட்டி அறிகுறிகளை குறைத்து விடும். நாள்பட்ட அசிடிட்டி பிரச்சினை இருந்தால் இந்த சோம்புவை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். அந்த தண்ணீரை எடுத்து குடித்து வர அசிடிட்டி பிரச்சினை நீங்கி விடும்.
- சில சீரகத்தை வாயில் போட்டு மெல்லலாம். அமிலத்தன்மையை குறைக்க தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்ததும் அந்த தண்ணீரை குடிக்கலாம்.
- அசிடிட்டி பிரச்சினை இருக்கும் சமயங்களில் கிராம்பை எடுத்து கடித்து அதன் சாற்றை முழுங்குங்கள். அந்த சாறு உங்க நெஞ்செரிச்சலை போக்கி அமிலத்தன்மையை போக்க உதவும். தொண்டை புண்ணை போக்கவும் உதவும்.
- ஏலக்காயின் இரண்டு காய்களை (தோலுடன் அல்லது இல்லாமல்) நசுக்கி அதன் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குளிர்ந்த சாற்றை உடனடி நிவாரணத்திற்காக பயன்படுத்துங்கள். அசிடிட்டி பிரச்சினையை விரட்டி விடலாம்
- சில புதினா இலைகளை நறுக்கி ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் போட்டு சூடு படுத்துங்கள். பிறகு குளிர்ந்த பிறகு அந்த தண்ணீரை குடிக்கவும். அஜீரணத்தை அமைதிப்படுத்த புதினா இலைகள் உதவுகிறது.
- ஒரு சிறிய துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். முடிந்தால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இஞ்சி டீ போட்டு குடித்து வரலாம். சுவைக்கு ஒரு சிறு துண்டு வெல்லத்தை கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு உங்க வயிற்றை அமைதிப்படுத்த உதவுகிறது.
- 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வரலாம். இதில் அதிகளவு விட்டமின் சி இருப்பது அமிலத்தன்மையால் காயமடைந்த வயிற்று புறணி மற்றும் உணவுக்குழாயை குணப்படுத்த பயன்படுகிறது.