தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை சடலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள், பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.
இதேவேளை, இலங்கையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நடுக்கடலில் மாயமான சூழ்நிலையில், அவர்களில் ஒருவரது சடலமா இது என்பதை உறுதிசெய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.